உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் இணையச் சேவையின் அதிகாரம் ஒரே ஒரு நபரின் கைகளில் இருப்பது தேசியப் பாதுகாப்புக்கு பேராபத்து என நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் பால் க்ரூக்மேன் எச்சரித்துள்ளார்.
யுக்ரைன் போரின் போது எலான் மஸ்க் தன்னிச்சையாக எடுத்த சில முடிவுகள் உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்வளவு பெரிய ராணுவ மற்றும் தொழில்நுட்ப முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சொத்து தனிநபரின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்றும், அவரிடமிருந்து அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.