ஈரானுடன் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் அமெரிக்காவே முடிவுக்கு கொண்டுவரும் - ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானுடனான முரண்பாடுகள் "மிக விரைவில் ஒரு வழியில் அல்லது வேறு வழியில்" முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் அமெரிக்காவுடன் உடன்படிக்கைக்கு வர வேண்டும்.

தவறினால், அமெரிக்காவே இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவரும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு ஊடகம் ஓன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ஈரான் மீது அமெரிக்கா ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக ட்ரம்ப் உரிமை கோரினார்.

"நாங்கள் இத்தகைய வெற்றியைப் பெற்றுள்ளோம், மிக விரைவில் இதனை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவோம். அவர்கள் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அல்லது நாங்கள் அதை முடிவுக்குக் கொண்டுவருவோம்" என்று குறிப்பிட்ட ட்ரம்ப், இதனை இலகுவான வழியிலும் செய்யக்கூடும் என சுட்டிக்காட்டினார்.

Bootstrap