தயாரிப்பாளர் மகன் திருமணத்தில் உற்சாக நடனம் ஆடிய வடிவேலு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் நகைச்சுவை நடிகர் வடிவேலு, சமீபத்தில் நடைபெற்ற பிரபல தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் திருமண விழாவில் கலந்துகொண்டு மேடையில் உற்சாகமாக நடனமாடியுள்ளார்.

இதுவரை எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் இத்தகைய நடனத்தை ஆடாத வடிவேலுவின் இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது 'மாமன்னன்', 'மாரீசன்' ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு 'போர் முழக்கம்', 'பேங் பேங்' மற்றும் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'தனுஷ் 56' ஆகிய திரைப்படங்களில் நடிகர் வடிவேலு நடித்து வருகிறார்.

'படிக்காதவன்' படத்திற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து தனுஷுடன் வடிவேலு மீண்டும் இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bootstrap