தனது சொந்த சாதனையை முறியடித்தார் ரஜினிகாந்த் - 800 கோடியைக் கடந்து ‘ஜெயிலர் 2’ பிரம்மாண்ட சாதனை!

இந்திய பொக்ஸ் ஆபீஸில் தனது சொந்த சாதனையை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முறியடித்துள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் வெறும் 17 நாட்களில் இந்த இமாலய சாதனையை அடைந்துள்ளது.

இந்திய வசூல் - ரூ. 520.35 கோடி வசூல் அடைந்திருந்தாலும், உலகளாவிய வசூல் - ரூ. 790.85 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

2018-இல் வெளியான அவரது பிளாக்பஸ்டர் திரைப்படமான '2.0'-வின் வாழ்நாள் வசூலைக் கடந்து, இந்திய பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற புதிய வரலாற்றை 'ஜெயிலர் 2' படைத்துள்ளது.

உலகளவில் இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படமும் எட்டாத புதிய உயரத்தை இப்படம் எட்டியுள்ளது. இதனால் நெட்டீசன்கள் சமூக வலைத்தளங்களில் ஜெயிலர் - 02வை வாழ்த்தி வருகின்றனர்.

sacnilk தளத்தின் தரவுகளின்படி, '2.0' படத்தின் 519 கோடி இந்திய மொத்த வசூலை முந்தி, 'ஜெயிலர் 2' இதுவரை இந்தியாவில் ரூ. 520.35 கோடி மொத்த வசூல் (Gross) செய்துள்ளது.

இதன் இந்திய நிகர வசூல் (Net) ரூ. 444.75 கோடி ஆகும் (2.0 படத்தின் நிகர வசூல் ரூ. 407.05 கோடி).

தென்னிந்தியாவின் நான்கு பிரதான திரைச் சந்தைகளிலும் தலா 75 கோடி ரூபாய்க்கு மேல் மொத்த வசூல் செய்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையையும் 'ஜெயிலர் 2' பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் ரஜினிகாந்தின் திரைப்படங்களில் முதன்முறையாக ரூ. 200 கோடி மொத்த வசூலைக் கடந்த படமாக இது உருவெடுத்துள்ளது.

Bootstrap