ஹோர்முஸ் நீரிணையில் நுழைந்த அனுமதிக்கப்படாத கப்பல்கள் வெடித்துச் சிதறின

ஹோர்முஸ் நீரிணை அனுமதிக்கப்படாத பாதையில் பயணித்த இரு எண்ணெய் தாங்கி கப்பல்கள், கண்ணிவெடிகளில் மோதியதைத் தொடர்ந்து "வெடித்துச் சிதறியதாக" ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) கடற்படை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்மூஸ் நீரிணை வழியாக செல்வதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கும், அவர்களின் நட்பு கப்பல்களுக்கும் ஈரான் அரசு தடை விதித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையின் குறிப்பிட்ட பாதைகள் வழியாக மட்டுமே வெளிநாடுகளின் சரக்குக் கப்பல்கள் அனுமதிக்கப்படும் நிலையில், மற்ற பாதைகளில் கப்பல்களைத் தகர்க்கும் கண்ணிவெடிகளை ஈரானிய படைகள் பொருத்தியுள்ளன.

இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தங்களின் அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணையின் வழியாகச் செல்ல முயன்ற இரு கப்பல்கள் மேற்படி கண்ணிவெடி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Bootstrap