ஈரானுக்குச் சொந்தமான கெஷ்ம் தீவில் அமெரிக்க இராணுவம் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் சொத்துகள் மற்றும் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில், தற்காப்பு நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக அமெரிக்கத் தரப்பை மேற்கோள்காட்டி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், தாக்குதலின் இலக்குகள் மற்றும் சேத விவரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.