களனி பகுதியில் அமைந்துள்ள பெண்கள் விடுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தீப்பரவலுக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.