நாமல் ராஜபக்சவுக்கு பிணை

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய, தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் அவர் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையும் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Bootstrap