ஈரானுடன் உடன்பாடு எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 7% சரிவு!

ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ட்ரம்பின் நிர்வாகம் அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் இல்லாத வகையில் ஒரே நாளில் 7 சதவீதத்திற்கும் அதிகமாக விலை குறைந்துள்ளது.

இதன்படி , பிரெண்ட் மசகு எண்ணெய் (Brent crude) சர்வதேச சந்தை விலையானது 7% வரை சரிந்து, ஒரு பீப்பாய் 105 அமெரிக்க டொலருக்கும் , டபிள்யூ.டி.ஐ மசகு எண்ணெய் (US WTI) அமெரிக்க சந்தை விலையானது ஒரு பீப்பாய் 97 அமெரிக்க டொலருக்கும் கீழ் சரிவடைந்து விற்பனையாகி வருகிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் தளர்வுகள் மற்றும் அமெரிக்கா-ஈரான் இடையே எட்டப்பட்டு வரும் பேச்சுவார்த்தை முன்னேற்றங்கள் காரணமாகவே எண்ணெய் விநியோகம் சீராகும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே சர்வதேச மசகு எண்ணெய் வர்த்தகத்தில் இந்த விலை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

Bootstrap