மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் - ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரானின் குவாசம் தீவு மீது அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

ஹோர்முஸ் நீரினை அருகே குவாசம் தீவில் உள்ள ஏவுகணை ஏவு தளங்கள் மற்றும் ஈரானின் இராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் உயிரிழப்பு சம்பவங்கள் ஏதேனும் ஏற்பட்டதா? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

அதேவேளை, அமெரிக்க பாராளுமன்ற இடைக்கால தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில் ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Bootstrap