வடகொரியா தனது கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியை நோக்கி அடையாளம் காணப்படாத ஏவுகணை ஒன்றை ஏவியுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு இன்று (04) இதனை அறிவித்துள்ளதுடன், இது வடகொரியாவின் மற்றுமொரு ஏவுகணைச் சோதனையாக இருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏவப்பட்ட ஏவுகணையின் வகை மற்றும் ஏனைய விபரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
கடந்த ஒரு மாத காலப்பகுதியில் வடகொரியா மேற்கொண்ட நான்காவது ஏவுகணைச் சோதனையாக இது இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வடகொரியா இந்த ஆண்டில் பல்வேறு ஏவுகணைச் சோதனைகளை முன்னெடுத்துள்ளதுடன், 900 கிலோமீட்டருக்கும் அதிக தூரம் பயணிக்கக்கூடிய ஏவுகணைகள் மற்றும் அதிவேக ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.