அமெரிக்கத் தேர்தல்: பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்தின் நிலை குறித்து வாக்காளர்கள் அதிக கவலை!

அமெரிக்கத் தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் ஜனநாயகத்தின் தற்போதைய நிலை ஆகியவை வாக்காளர்களின் முக்கிய கவலைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

79,000 இற்கும் அதிகமானோர் பங்கேற்ற இந்தக் கருத்துக்கணிப்பில், 39 வீதமானோர் பொருளாதார நிலைமையே தங்களுக்கு மிக முக்கியமான பிரச்சினை எனத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, 32 வீதமானோர் ஜனநாயகத்தின் தற்போதைய நிலைமையை முக்கிய பிரச்சினையாகக் குறிப்பிட்டுள்ளனர்.

'Voter Poll' என அழைக்கப்படும் இந்தக் கருத்துக்கணிப்பு, அமெரிக்க வாக்காளர்களின் தேர்தல் தொடர்பான கருத்துக்கள் மற்றும் அவர்களின் வாக்களிப்பு முடிவுகளைப் பாதிக்கும் காரணிகளை ஆராயும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

SSRS என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம், செய்தி நிறுவனங்களின் கூட்டமைப்புக்காக இந்த ஆய்வை நடத்தியுள்ளதுடன், வயது, பாலினம், கல்வித் தகைமை உள்ளிட்ட பல்வேறு அடிப்படைகளிலும் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

Bootstrap