ஸ்பெயினில் 69 பேர் உயிரிழந்த தொடருந்து விபத்து இடம்பெற்று ஆறு நாட்களுக்குப் பின்னர், அந்தநாட்டின் போக்குவரத்து அமைச்சர் ஒஸ்கார் புவென்டே பதவி விலகியுள்ளார்.
கடந்த ஒக்ரோபர் 28ஆம் திகதி, மாட்ரிட் நகருக்கு தெற்கே உர்டா நகருக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த தொடருந்தின் பின்புறத்தில் அதிவேக தொடருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.
இதில் 69 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.
ஒரு வருடத்திற்குள் இடம்பெற்ற இரண்டு பாரிய தொடருந்து விபத்துக்களுக்குப் பொறுப்பேற்று பதவியில் தொடர முடியாது எனத் தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
மேலும், தொடருந்தின் சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
அமைச்சரின் பதவி விலகல் குறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர் பெட்ரோ சான்செஸ், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அமைச்சர் தாமாகவே பதவி விலகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.