நீதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ‘இராமாயணா பாகம் 1’ ஆகும்.
இந்த திரைப்படம் நாளை வியாழக்கிழமை(05) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், திரையரங்குகளில் முன்பதிவு சூடுபிடித்துள்ளது.
இந்தியாவில் இப்படத்தின் முன்பதிவு வசூல் இந்திய மதிப்பில் ரூ. 96.56 கோடியைக் கடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை நாடு முழுவதும் 25.65 இலட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.
இதன் மூலம் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு மட்டும் ரூ. 14.20 லட்சம் முன்பதிவு வசூலாகியுள்ளது.