இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வரலாற்றுச் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 3 ஆம் எண் வரிசையில் களமிறங்கி 13,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டிய உலகின் முதல் துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தனது வெற்றி இலக்கை அடைவதற்கு துடுப்பெடுத்தாடும் போதே அவர் இந்த வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளார்.
இந்தப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
கோலிக்கு அடுத்தபடியாக 3 ஆம் வரிசையில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் பாண்டிங் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலியின் இந்தச் சாதனை கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.