சுவிட்சர்லாந்தின் விலைவாசி அதிகமுள்ள நகரங்களிலிருந்து ஏராளமான மக்கள் வெளியேறிவருகிறார்கள்.

சுவிட்சர்லாந்தின், ஜெனீவா, சூரிக் மற்றும் பேசல் போன்ற விலைவாசி அதிகமுள்ள நகரங்களிலிருந்து வரலாறு காணாத அளவிலான மக்கள் வெளியேறிவருகிறார்கள்.

UBS நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வொன்றில், ஜெனீவாவிலிருந்து ஆண்டொன்றிற்கு 1,400 பேரும், சூரிக்கிலிருந்து 3,500 பேரும் வெளியேறியுள்ளது தெரியவந்துள்ளது.

இப்படி, விலைவாசி அதிகம் என்பதால் ஜெனீவாவிலிருந்து வெளியேறிய மக்கள், வாட், வாலேஸ் மற்றும் ஃப்ரைபர்க் மாகாணங்களிலும், சூரிக்கிலிருந்து வெளியேறியவர்கள் ஆர்காவ், ஷெஃபாசன் மற்றும் தூர்கா மாகாணங்களிலும் குடியேறியுள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், இப்படி ஏராளமானவர்கள் ஜெனீவா, சூரிக்கிலிருந்து வெளியேறிவந்தாலும், இந்த நகரங்களில் வீடுகள் பற்றாக்குறை தீரமாட்டேன்கிறது.

காரணம், வெளிநாட்டவர்கள் ஏராளம் பேர் இங்கு வருகிறார்கள். ஆண்டொன்றிற்கு சுமார் 10,300 பேர் ஜெனீவாவிலும், சுமார் 19,000 பேர் சூரிக்கிலும் வந்து குடியமர்கிறார்கள்!

Bootstrap