ரஷ்யாவிற்கு எதிராக விளையாடப்போவதில்லை - தேசிய கூட்டமைப்புகள் அறிவிப்பு

ஜேர்மனியில் நடைபெறும் ஐஸ் ஹாக்கியில் ரஷ்யாவிற்கு எதிராக விளையாடப்போவதில்லை என ஐரோப்பிய நாடுகளின் தேசிய கூட்டமைப்புகள் அறிவித்துள்ளன.

நோர்வே, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளின் தேசிய கூட்டமைப்புகள் ஜேர்மனியில் நடைபெறும் ஐஸ் ஹாக்கியில் ரஷ்யாவிற்கு எதிராக விளையாடப்போவதில்லை என அறிவித்துள்ளன.

ரஷ்யா 2022-ஆம் ஆண்டில் உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, சர்வதேச ஐஸ் ஹாக்கி கூட்டமைப்பு (IIHF) ரஷ்ய அணிகளைப் போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து நீக்கியிருந்தது.

இந்த நிலையில், கடந்த வாரம் ரஷ்யா மீண்டும் சர்வதேச ஐஸ் ஹாக்கி கூட்டமைப்பின் போட்டிகளில் பங்கேற்கலாம் என தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து நோர்வே, டென்மார்க், ஸ்வீடன், லாட்வியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளின் தேசிய கூட்டமைப்புகள் அறிவித்துள்ளன.

டென்மார்க் ஐஸ் ஹாக்கி ஒன்றியத்தின் தலைவர் ஹென்ரிக் பாக் நீல்சன், "ஐஸ் ஹாக்கி விளையாட்டின் நேர்மையாகக் கருத்தில் கொண்டால், தற்போதைய சூழலில் ரஷ்யாவிற்கு எதிராக விளையாடுவதை எங்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. அப்படி செய்தால் அது பெரும் குழப்பத்திற்கே வழிவகுக்கும்" என்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

 

Bootstrap