இலங்கையில் வாழ்க்கைச் செலவு மேலும் அதிகரிப்பு - வெளியானது புதிய வறுமைக் கோட்டுத் தரவு!

இலங்கையில் ஒருவருக்கான மாதாந்த குறைந்தபட்ச வாழ்க்கைச் செலவு 17,742 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட செப்டெம்பர் மாதத்திற்கான உத்தியோகபூர்வ தேசிய வறுமைக் கோட்டுத் தரவுகளின்படி இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒருவர் மாதமொன்றுக்கு அவசியமாகச் செலவிட வேண்டிய குறைந்தபட்சத் தொகையே தேசிய வறுமைக் கோடாகக் கணிக்கப்படுகிறது.

இதன்படி, செப்டெம்பர் மாதத்தில் அதிகூடிய வறுமைக் கோடு கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு ஒருவருக்கான மாதாந்த குறைந்தபட்சச் செலவு 19,136 ரூபாயாகும்.

கம்பஹா மாவட்டத்தில் 19,037 ரூபாயாகவும், களுத்துறை மாவட்டத்தில் 18,624 ரூபாயாகவும் இந்தச் செலவு பதிவாகியுள்ளது.

அதேவேளை, குறைந்த வறுமைக் கோடு மொனராகலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு ஒருவருக்கான மாதாந்த குறைந்தபட்சச் செலவு 16,965 ரூபாயாகக் காணப்படுகிறது.

Bootstrap