2026 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த உணவகமாக ஸ்பெயினின் பாஸ்க் (Basque) பிராந்தியத்தில் உள்ள Atxondo பகுதியில் அமைந்துள்ள Asador Etxebarri உணவகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலகின் சிறந்த 50 உணவகங்களை மதிப்பீடு செய்யும் 'The 50' அமைப்பு, 2026 ஆம் ஆண்டிற்கான பட்டியலை பெரு நாட்டின் லிமா நகரில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
நிலக்கரியைப் பயன்படுத்தி இறைச்சி மற்றும் கடல் உணவுகளைச் சமைக்கும் தனித்துவமான முறைக்காக இந்த உணவகம் உலகளவில் புகழ்பெற்றுள்ளது.
இந்த அங்கீகாரம் கிடைத்ததைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அதன் தலைமைச் சமையல் கலைஞர் பிட்டோர் அர்குயின்சோனிஸ் (Bittor Arguinzoniz),
“இந்த விருது தனக்குக் கிடைத்த உண்மையான கௌரவம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது சமையல் கலைக்குத் தனது தாய் மற்றும் பாட்டியிடமிருந்து கிடைத்த ஊக்கத்தையும் அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.