எண்ணெய்க் கப்பல்களைச் சூழ்ந்த தீ – ஹோர்முஸில் பதற்றம்!

ஹோர்முஸ் நீரிணையில் அனுமதியற்ற கடற்பாதையைப் பயன்படுத்திப் பயணிக்க முயன்ற இரண்டு எண்ணெய்க் கப்பல்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தகவலின்படி, நீரிணையில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் ஒரு கப்பல் சிக்கியுள்ளது.

மற்றொரு கப்பல், அனுமதிக்கப்பட்ட கடற்பாதையிலிருந்து கிழக்குப் பகுதிக்கு விலகிச் செல்ல முயன்றபோது தீப்பற்றியுள்ளது.

இரண்டாவது கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்துவதற்காகச் சென்ற இழுவைப் படகுக்கும் தீ பரவியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Bootstrap