வரலாற்றில் முதன்முறையாக: 5 கருப்பித்தனவர்கள் வெற்றி

அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று 5 கருப்பினத்தவர்கள் ஆளுநர் பதவியை வகிக்க உள்ளனர்.

அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் ஜனநாயக கட்சி மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இது டிரம்ப் அரசின் மீது மக்களின் எண்ணத்தை வெளிக்காட்டுவதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ், ஈரான் போரே தோல்விக்கு காரணமாக என வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

இடைத்தேர்தலுக்கு முன்னதாக 3 கருப்பினத்தவர்கள் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது சாதனையாக இருந்தது. இதனை முறியடிக்கும் வண்ணம் இந்த தேர்தலில் 5 பேர் ஆளுநர் பதவி வகிக்கவுள்ளனர்.

56 வயது மதிக்கத்தக்க Lance Bottoms வழக்கறிஞர் ஆவார், அட்லாண்டா நகரமன்ற உறுப்பினராகவும், நீதித்துறை நடுவராகவும் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை அட்லாண்டா நகர ஆளுநராக பணியாற்றியவர்.

48 வயதான Byron Donalds நாட்டின் முதல் கறுப்பின குடியரசு கட்சி ஆளுநர் ஆவார். 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை புளோரிடா மாநில பிரதிநிதிகள் சபையில் பணியாற்றினார். 2020-ல் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், 2021 முதல் புளோரிடாவின் 19-வது நாடாளுமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார்.

40 வயதான David Crowley மாகாணத்தின் முதல் இளவயது ஆளுநர் ஆவார். 2017ம் ஆண்டு முதல் 2020 வரை விஸ்கான்சின் மாநில சட்டமன்றத்தில் மில்வாக்கியின் 17வது மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். பின்னர் 2020-ல், மில்வாக்கி கவுண்டி நிர்வாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பின வேட்பாளராகவும், மிக இளையவராகவும் ஆனார்.

54 வயதான Aaron Ford வழக்கறிஞர் ஆவார், ஏற்கனவே பதவியில் இருந்த குடியரசுக்கட்சி வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். முதன்முதலில் நெவாடா செனட் சபையில் 2013 முதல் 2018 வரை 11வது மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், அங்கு அவர் மற்றும் சிறுபான்மை மற்றும் பெரும்பான்மைத் தலைவர் ஆகிய இரு பதவிகளிலும் பணியாற்றினார். அவர் 2018-ல் நெவாடாவின் தலைமை வழக்கறிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் 2019-ல் பதவியேற்றபோது மாநிலத்தின் முதல் கறுப்பின அரசியலமைப்பு அதிகாரியானார்.

48 வயதான Wes Moore ஏற்கனவே 2022ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆளுநகராக பதவியேற்றார், தற்போதைய தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார். அதற்கு முன்னதாக எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியையும் இவர் வகித்ததில்லை.

Bootstrap