அவுஸ்திரேலிய பெண்ணொருவர் தனது இறந்த தந்தையிடமிருந்து வந்த Missed Call-யினால் அதிர்ச்சியடைந்தார்

அவுஸ்திரேலியாவில் பெண்ணொருவருக்கு இறந்த அவரது தந்தையிடமிருந்து வந்த Missed Call அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் ஹண்டர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த லெஸ் என்ற நபர் 2018ஆம் ஆண்டு காலமானார்.

இந்த நிலையில், லெஸ்-யின் மகளுக்கு ஒரு Missed Call வந்ததாக MessageBank எச்சரிக்கை செய்துள்ளது.இதனை அறிந்து ஏப்ரல் எனும் பெயருடைய அப்பெண் அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து ஜூலை மாதம் ஏற்பட்ட நாடு தழுவிய செயலிழப்பைத் தொடர்ந்து இந்தத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதுதான் இதற்கு காரணம் என்று தெரிய வந்தது.

அந்த செயலிழப்பினால் மில்லியன் கணக்கான Telstra வாடிக்கையாளர்கள் அழைப்புகளை மேற்கொள்ளவோ, மொபைல் டேட்டாவை அணுகவோ அல்லது மின்னணுப் பணப்பரிவர்த்தனை முறைகளைப் பயன்படுத்தவோ முடியாமல்போனது.

தங்களுக்கு அருகிலேயே அமர்ந்திருந்த அன்புக்குரியவர்களிடம் இருந்து missed-call அறிவிப்புகள் வந்ததாக மற்ற வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சேனல் செவனின் சன்ரைஸ் நிகழ்ச்சியில் பேசிய ஏப்ரல், "என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் Telstra இதனை சரிசெய்ய வேண்டும். ஏனென்றால், இங்கு இல்லாதவர்களிடம் இருந்து செய்திகள் வரும்போது அது நம்மை திடுக்கிடச் செய்கிறது" என்றார்.

இதுபோல் ஆயிரக்கணக்கான Telstra வாடிக்கையாளர்களுக்கு மர்மமான தவறவிட்ட அழைப்பு மற்றும் குரல்வழி எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டு, இணையவழித் தாக்குதல் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், Telstra தொலைத்தொடர்பு நிறுவனம் தனது அமைப்புகள் ஹேக் செய்யப்படவில்லை என்று வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது.

அத்துடன் அதன் MessageBank குரல்வழிச் செய்தி சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்த செயலிழப்புக்குக் காரணம் என்றும் கூறியுள்ளது.

அதே சமயம், இந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டதாக புதன்கிழமை இரவு Telstra அறிவித்தது. அதேவேளையில் இதற்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

மேலும், தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைவர் விக்கி பிராடி, தனது குடும்பத்திற்கான வெளிநாட்டு விடுமுறையைக் கைவிட்டு, இந்த விவகாரம் குறித்துப் பேசுவதற்காகத் தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Bootstrap