ட்ரம்பின் இடைக்காலத் தேர்தல் தோல்வியை ஈரானியர்கள் பலர் கேலி செய்துள்ளார்கள்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் ட்ரம்ப் கட்சி தோல்வியை சந்தித்ததை பலரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் விமர்சித்துவருகிறார்கள்.

இந்நிலையில், ட்ரம்பால் நேரடியாக பாதிக்கப்பட்ட ஈரானியர்களின் கருத்து என்ன என்பது குறித்து சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் வெளியான சிறிது நேரத்தில், தலைநகர் டெஹ்ரானிலுள்ள முன்னாள் அமெரிக்க தூதரகத்துக்கு முன், அமெரிக்காவுக்கு எதிரான பேரணி ஒன்றிற்காக கூடியிருந்த மக்களில் பலர் அமெரிக்காவுக்கு எதிராக கோஷம் எழுப்பியுள்ளார்கள்.

கைகளில் ஈரான் நாட்டுக் கொடியை ஏந்தியிருந்த பலரும், ’Death to America’ என்பது போன்ற கோஷங்களை எழுப்பியுள்ளார்கள்.

பலரும் அமெரிக்காவுக்கு எதிராக பலவிதமான கருத்துக்களை முன்வைத்த நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திவந்தவர்களின் தலைமை வகித்தவரான Mohammad Bagher Ghalibaf, அமெரிக்க மக்களின் முடிவை வரவேற்றுள்ளார்.

சமூக ஊடகமான எக்ஸில் அவர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், தங்கள் மனசாட்சியினிமித்தமோ, அல்லது விலைவாசி உயர்வு காரணமாகவோ, அமெரிக்கர்கள் போருக்கு NO சொல்லியிருக்கிறார்கள், அந்த விடயத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும், ஈரான் நாட்டு பொதுமக்களைப் பொருத்தவரை, அமெரிக்காவில் யார் ஆட்சி செய்தாலும் சரி, அது குடியரசுக் கட்சியானாலும் சரி, ஜனநாயகக் கட்சியானாலும் சரி, அது எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்னும் கருத்தே அதிகம் நிலவுகிறது!

Bootstrap