ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்கும் கப்பல்களுக்கு IRGC விடுத்துள்ள எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை வழியாக அனுமதியற்ற பாதைகளைப் பயன்படுத்திச் செல்ல முயன்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள், கண்ணிவெடிகளில் மோதியதால் தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) தெரிவித்துள்ளது.

சர்வதேச ஊடகங்களின் தகவல்படி, இந்த இரண்டு எண்ணெய் கப்பல்களும் ஒன்று ஹோர்முஸ் நீரிணையின் கிழக்கு பகுதியிலும், மற்றொன்று ஹோர்முஸ் நீரிணைக்குள்ளும் அந்த நீர்ப்பரப்பில் நிறுத்தப்பட்டன என்று IRGC குறிப்பிட்டுள்ளது.

இந்த இரண்டு கப்பல்களும் தங்கள் வழிசெலுத்தல் மற்றும் அடையாள அமைப்புகள் அனைத்தையும் அணைத்துவிட்டு, ஆக்கிரமிப்பு மற்றும் பயங்கரவாத அமெரிக்க இராணுவத்தின் ஆதரவுடன் அங்கிருந்து வெளியேற முயன்றதாக கூறப்படுகின்றது.

கண்ணிவெடிகளில் மோதிய பிறகு, அவை தீப்பிடித்து எரிந்தன, மேலும் அங்கேயே நிறுத்தப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முக்கியமான நீர்வழிப்பாதை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும், அமெரிக்காவிடம் முன்வைக்கப்பட்ட ஏழு நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை இதில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் IRGC மீண்டும் வலியுறுத்தியது.

மேலும், எண்ணெய் கப்பல்களை அனுமதியற்ற மற்றும் கண்ணிவெடிகள் நிறைந்த பகுதிகள் வழியாகச் செல்லுமாறு அமெரிக்க இராணுவம் கட்டாயப்படுத்த முயற்சிப்பது, மீண்டும் மீண்டும் அவமானகரமான தோல்விகளுக்கே வழிவகுக்கும் என்றும் அது கூறியது.

Bootstrap