உலகப் புகழ்பெற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா, 9/11 தாக்குதல் முதல் உலக நிகழ்வுகள் பலவற்றை முன்கூட்டியே கணித்து அதிர்ச்சியளித்தவர்.
2026 ஆம் ஆண்டு நிறைவடையும் தற்போதைய சூழலில், 2027 ஆம் ஆண்டுக்கான அவரது கணிப்புகள் உலக அளவில் பெருமளவு கவனத்தை ஈர்த்து வருகின்றன.
பாபா வங்கா கணித்துள்ள 2027-ஆம் ஆண்டின் முக்கிய சம்பவங்கள்:
மனிதர்களுக்குச் சூப்பர் பவர்: உலகளவில் பரவப்போகும் ஒரு மர்ம நோயால் மக்கள் பாதிக்கப்படுவர் என்றும், அதன் விளைவாகச் சில மனிதர்களுக்குப் பாபா வங்காவைப் போன்றே விசித்திரமான 'சூப்பர் பவர்' ஆற்றல்கள் கிடைக்கக்கூடும் என்றும் கணித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியும் தங்கம் விலையேற்றமும்: 2027இல் ஏற்படவுள்ள உலகளாவிய பண நெருக்கடி காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி நகர்வார்கள். இதனால் தங்கத்தின் விலை 25% முதல் 40% வரை அதிரடியாக உயரும் வாய்ப்புள்ளது. AI தொழில்நுட்ப உதிரிபாகங்களில் தங்கத்தின் பயன்பாடும் இதற்கு ஒரு காரணமாக அமையும்.
புதிய ஆற்றல் புரட்சி: 2028-ல் மனிதகுலம் பயன்படுத்தப்போகும் கார்பன் வெளியேற்றமில்லாத 'அணுக்கரு இணைவு' (Nuclear Fusion) போன்ற புதிய ஆற்றல் மூலத்திற்கான தீவிர ஆராய்ச்சிகள் 2027-ல் நிறைவடையும்.
புட்டின் பதவியிழப்பும் உலக அரசியலும்: ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 2027-ல் பதவியில் நீடிக்க மாட்டார் எனக் கூறப்படுகிறது. இந்தத் தலைமை மாற்றம் உக்ரைன் போர் முடிவு மற்றும் உலகளவில் பல அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
இந்தக் கணிப்புகள் உலக மக்களிடையேயும் சமூக வலைத்தளங்களிலும் தற்போதே பெரும் சுவாரஸ்யத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன.