கனடாவில் 4 தயாரிப்புகளுக்கு அவசரத் திரும்பப் பெறல் அறிவிப்பு

கனடாவில் விற்பனை செய்யப்பட்ட நான்கு வகையான தயாரிப்புகள், தீப்பற்றும் மற்றும் உடல்காயங்களை ஏற்படுத்தும் அபாயம் காரணமாக உடனடியாகச் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்படுவதாக கனடா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட இந்தத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை நுகர்வோர் உடனடியாக நிறுத்துமாறு வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பேபி பிரெஸா சூப்பர்ஃபாஸ்ட் ஸ்டெரிலைசர் ட்ரையர் , இந்தச் சாதனம் மின்சாரத்தில் இணைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும் போது அளவுக்கு அதிகமாகச் சூடாகி, தீப்பற்றும் மற்றும் தீக்காயங்களை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

கனடாவில் 20 அதிக வெப்பமடைதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இருப்பினும் அக்டோபர் 29 வரை எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. போஸ் S1 புரோ மற்றும் S1 புரோ+ பேட்டரி பேக்குகள் லித்தியம்-அயன் பேட்டரிகள் பழமையாம்போது தீப்பற்றும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

உலகளவில் 7 சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இந்த லித்தியம்-அயன் பேட்டரிகளை உடனடியாகக் கழற்றிப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போஸ் நிறுவனத்தை 1-800-869-2114 என்ற இலக்கத்திலோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ தொடர்புகொண்டு மாற்றுப் பேட்டரியைப் பெறலாம். நியூடரி பவர் பேங்க்ஸ் இதில் உள்ள லித்தியம்-அயன் பேட்டரி வெடிக்கும் அல்லது தீப்பிடிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு Amazon.ca மூலம் ஏற்கனவே பணம் மீளளிக்கப்பட்டுள்ளது (Refund). மேலதிக விவரங்களுக்கு 1-888-256-6673 அல்லது support@newdery.com மூலம் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம்.

குறிப்பிட்ட இந்தத் தயாரிப்புகளை வைத்திருக்கும் நுகர்வோர் தங்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு அவற்றை உடனடியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Bootstrap