அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி உடன்படிக்கை அவசியம் – கட்டார் பிரதமர் வலியுறுத்தல்!

தற்போது தொடரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமெரிக்காவும் ஈரானும் அமைதி உடன்படிக்கையை எட்ட வேண்டும் என கட்டார் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான ஷேக் மொஹமட் பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி வலியுறுத்தியுள்ளார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நேர்காணலின்போது கருத்துத் தெரிவித்த அவர், இரு நாடுகளும் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்குச் சிறந்த தருணம் வரும் வரை காத்திருக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள ஈரானின் கெஷ்ம் தீவை இலக்குவைத்து இரண்டு ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், இந்தத் தாக்குதலில் எவருக்கும் உயிரிழப்போ காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Bootstrap