டெஸ்லா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) இலோன் மஸ்க், தனது 'சைபர்ட்ரக்' (Cybertruck) ரக வாகனங்களின் உற்பத்தியை அடுத்த ஆண்டின் நடுப்பகுதிக்குள் நிறுத்த அல்லது கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சந்தைக்கு வரவிருக்கும் புதிய 'சைபர்கேப்' (Cybercab) வாகன உற்பத்திக்கான இடத்தை உருவாக்குவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், சைபர்ட்ரக் உற்பத்தி வேறு தொழிற்சாலைக்கு மாற்றப்படுமா அல்லது முற்றிலும் நிறுத்தப்படுமா என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
தற்போது இந்த ரக வாகனங்களை உற்பத்தி செய்யும் ஒரே டெஸ்லா தொழிற்சாலையாக டெக்சாஸின் ஆஸ்டினில் அமைந்துள்ள 'கிகாஃபேக்டரி' (Gigafactory) மட்டுமே உள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சைபர்ட்ரக், பாரம்பரிய பிக்கப் வாகனங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று தொடக்கத்தில் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு புகழ்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.