மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட மறைமாவட்ட ஆயர்

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இன்றைய தினம் புதன்கிழமை(03/07/2024 மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா அவர்களை சந்தித்து வைத்தியசாலையின் தேவைகள் குறித்து கலந்துரையாடினார்.

மேலும் வைத்தியாசாலைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியதுடன் மன்னார் வைத்தியசாலையின் வசதிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது

Bootstrap