கனடாவில் பேரதிஸ்டம் அடித்த பெண்

கனடாவில் பெண் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் 70 மில்லியன் டொலர் பணப்பரிசில் வென்றுள்ளார்.

லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் 49 வயதான பெட்ரிசியா வோர்டன் என்ற பெண் இவ்வாறு பரிசு வென்றுள்ளார்.

கடந்த மே மாதம் 31ம் திகதி நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த பெண் இவ்வாறு பணப்பரிசு வென்றுள்ளார்.

வோர்டன் கடந்த பல ஆண்டுகளாகவே லொத்தர் சீட்டிலுப்புக்களில் பங்கேற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது இடது உள்ளங்கை அரிப்பு எடுத்ததாகவும் அதனால் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு கிட்டும் என நினைத்ததாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றமை மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் உணர்வுகள் பொங்கிட்டதாகவும் வோர்டன் தெரிவிக்கின்றார்.

Bootstrap