நான் இறந்தால் இப்படிச் செய்யுங்கள்! வைத்தியர் அர்ச்சுனாவின் மற்றொரு அதிர்ச்சி தகவல்

நான் இறந்தால் இப்படிச் செய்யுங்கள்! வைத்தியர் அர்ச்சுனாவின் மற்றொரு அதிர்ச்சி தகவல்

நான் இறந்தால் கூட வைத்தியசாலையில் எனது விடுதியின் நடுவில் வைத்து எரிக்குமாறு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் , யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸார் என்னிடம் யார் உங்களுக்கு பாதுகாப்பு என வினவிய போது, எனது தமிழ் சமூகமும் என்னை நன்றாக விளங்கிய சிங்கள சமூகமும் தான் என கூறினேன்.

எனக்கு எவ்வாறு இந்த துணிவு வந்தது என்றால் 30 வருட கால யுத்தத்தினை கண்ணால் பார்த்து வளர்ந்தவன். அதனால் அந்த துணிவை எனது அப்பா ஊட்டி வளர்த்தார் என குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Bootstrap