தீடிரென விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்! 21 பேருக்கு நேர்ந்த நிலை?

பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இஸ்லாமாபாத் நகரில் இன்று காலை 11.15 மணியளவில் மி-8எம்.டி.வி.-1 ரக ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு ஷீவா நகர் நோக்கி சென்றுள்ளது.

இதன்பின்பு, மதியம் 1.15 மணியளவில் ஹெலிகாப்டரிலிருந்த பயணிகளில் ஒருவர் இறங்கியுள்ளார்.

இதன்பின்பு பன்னு நகர் நோக்கி ஹெலிகாப்டர் புறப்பட்டபோது, திடீரென அதன் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஹெலிகாப்டரை மீண்டும் ஷீவா நகரில் அவசர தரையிறக்கம் செய்ய வேண்டியிருந்தது.

அப்போது, அதன் வால் பகுதியில் இருந்த மின்விசிறியின் இறக்கை ஒன்று தரையில் மோதி விபத்தில் ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது ஹெலிகாப்டரில் 6 விமானிகள் உப்பட 21 பேர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள். காயமடைந்த நபர்களை மீட்க பெஷாவரில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Bootstrap