இலங்கையின் எல்லைக்குள் கால் வைத்தால் கைது செய்யப்படுவீர்கள்! எச்சரிக்கை விடுத்த சந்திரசேகர்

இலங்கையின் எல்லைக்குள் கால் வைத்தால் கைது செய்யப்படுவீர்கள் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலக வங்கிக் குழுவினர் மற்றும் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துன் நெத்தி, சந்திரசேகரன் ஆகியோருடன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பங்கேற்ற கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (29.06.2025) இடம்பெற்றது.

இதற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் சந்திரசேகர் இலங்கையின் எல்லைக்குள் சட்டவிரோத கடற்றொழில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்துள்ளார்.

"அத்துடன், அவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சட்டவிரோத கடற்றொழிலாளர்களின் படகுகள் பரிமுதல் செய்யப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

 

Bootstrap