வெளிவிவகார அமைச்சர் ஜெனீவா பயணம்

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று(07) காலை ஜெனீவாவுக்கு விமானம் மூலம் பயணமாகின்றார்.

அமைச்சருடன் ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தயானி மெண்டிஸும் செல்கின்றார்.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இதில், மதியம் ஒரு மணியளவில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உரையாற்றுவார் என்றும் தெரிய வந்துள்ளது.

Bootstrap