பிரான்ஸ் நாட்டின் பிரதமர் பிரான்சுவா பேரூ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் தேசிய சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பின்னரே அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 364 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 194 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், பிரதமர் பிரான்சுவா பேரூ தலைமையிலான சிறுபான்மை அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், ஒன்பது மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்த பிரான்சுவா பேரூ, இரண்டு பொது விடுமுறை நாட்களை இரத்து செய்தல் மற்றும் அரச செலவினங்களை முடக்குதல் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய 44 பில்லியன் யூரோ சேமிப்புத் திட்டங்களுக்கு பெரும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அவருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை கொண்டுவரப்பட்டது.