மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்காக இந்தியா, இலங்கை ரூபாயில் 600 மில்லியன்களை மானியமாக வழங்கியுள்ளது.
இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செப்டம்பர் 9 ஆம் திகதி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர்; அனில் ஜாசிங்க ஆகியோரால் கையெழுத்தானது.
இந்த கையெழுத்து நிகழ்வில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் கலந்து கொண்டார்.
இந்த உதவியின் ஊடாக இரண்டு மாடி யுஸ்ருன் பிரிவின் கட்டுமானம் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குவது ஆகியவை அடங்கும்.
மன்னாரில் அவசர சிகிச்சையில் ஒரு முக்கியமான இடைவெளியை இந்த வசதி நிரப்பும் என்றும், மருத்துவமனையின் தற்போதைய படுக்கை திறனில் அழுத்தத்தைக் குறைப்பதாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.