கட்டார் மீதான இஸ்ரேலிய தாக்குதல்! மோடி கடும் கண்டனம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கட்டார்  மீதான இஸ்ரேலிய தாக்குதல் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சகோதரத்துவம் வாய்ந்த கத்தாரின் இறையாண்மையை மீறுவதை இந்தியா கண்டிக்கிறது.

பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், மோதல் அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம்.

பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவாகவும், அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் இந்தியா உறுதியாக நிற்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவு அலுவலகம் நேற்று தாக்குதலை விமர்சித்தது, ஆனால் "கண்டனம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Bootstrap