2025 முதல் பாதியில் 18 பில்லியன் இலாபம் ஈட்டிய பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

2025ஆம் ஆண்டின் முதல் பாதியில், 18 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

பெட்ரோலியத் துறையை மேலும் மேம்படுத்துவதற்காக பல திட்டங்களை ஆரம்பிக்க இந்த இலாபம் பயன்படுத்தப்படுகிறது என்று கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமார கூறியுள்ளார்.

எரிபொருள் கட்டமைப்புக்களை மேம்படுத்துதல் மற்றும் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை மையப்படுத்தி, முத்துராஜவெல முனையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வரை மேற்கொள்ளப்படும் விமான எரிபொருள் குழாய் அமைக்கும் திட்டங்களையும் அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

Bootstrap