இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் உட்பட பல இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள், இன்று(21) நள்ளிரவு முதல், முன்மொழியப்பட்ட மறுசீரமைப்புக்கு எதிரான தங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவதாக அறிவித்துள்ளன.
கடந்த செப்டம்பர் 4 ஆம் திகதியன்று 'விதிப்படி வேலை' பிரசாரத்துடன் அவர்களின் போராட்டம் ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறை போராட்டமும் நடத்தப்பட்டது.
கடந்த 17 நாட்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை இருந்தபோதிலும் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் போராட்டத்தின் அடுத்த கட்டமாக, தொழிற்சங்க உறுப்பினர்கள் கேள்விப்பத்திரக் குழுக்களில் இருந்து விலகுவது உட்பட பல்வேறு குழு நடவடிக்கைகளில் பங்கேற்பதைத் தவிர்ப்பார்கள் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.