மனித புதைகுழிகள் உட்பட்ட போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் போது, ஐக்கிய நாடுகளின் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ள தயாராகவே இருப்பதாக இலங்கை மீண்டும் அறிவித்துள்ளது.
ஏற்கனவே கூறியபடி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மூலம் இந்த தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ள இலங்கை தயாராகவே உள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மனித புதைகுழிகளை அகழும் விடயத்துடன் தொடர்புடைய நீதித்துறை அதிகாரிகளின் கட்டளைகளுக்கு இணங்க இந்த உதவிகள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை மீதான புதிய தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்று கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.
இந்த தீர்மானத்தை ஏற்கனவே இங்கிலாந்தை தலைமையாக கொண்ட இலங்கை தொடர்பான முக்கிய நாடுகள் சமர்ப்பித்துள்ளன.
இதனடிப்படையில் 2028 வரை இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் கண்காணிப்பில் இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.