ஜப்பான் பாதுகாப்பு அமைச்சருடன் அநுர சந்திப்பு!

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் டி.எம். நகதானியை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

பாதுகாப்பு விடயங்களில் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான தற்போதைய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து வெகுவாக ஆராயப்பட்டது.

இந்தச் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட இலங்கைத் தூதுக் குழுவினர் கலந்துகொண்டனர்.

Bootstrap