மீண்டும் கனடாவை சீண்டிய டொனால்ட் ட்ரம்ப்

கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பேசியுள்ளார்.

கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டிய விடயத்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பேசியுள்ளார்.

நேற்று அமெரிக்க இராணுவத் தலைவர்கள் முன் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அப்போது, அமெரிக்காவின் Golden Dome ஏவுகணை பாதுகாப்பு திட்டம் குறித்து பேசிய அவர், சில வாரங்களுக்கு முன் கனடா தரப்பிலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், அவர்களும் இந்த பாதுகாப்புத் திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்ததாகவும் ட்ரம்ப் கூறினார்.

அதைத் தொடர்ந்து, அப்படியானால், கனடா ஏன் அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணையக்கூடாது?

Golden Dome ஏவுகணை பாதுகாப்பு திட்டம் உங்களுக்கு இலவசமாகவே கிடைக்குமே என்று மீண்டும் கூறியுள்ளார்.

கனடா மீது அமெரிக்கா கூடுதல் வரிகள் விதித்துள்ளதாலும், கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக ட்ரம்ப் மிரட்டியதாலும் கோபமடைந்துள்ள கனேடிய மக்கள் ஏற்கனவே அமெரிக்கப் பொருட்களையும், அமெரிக்க சுற்றுலாவையும் புறக்கணித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Bootstrap