"செம்மணி படுகொலை" மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

காணாமல் ஆக்கப்பட்டோர் பின்னனியில் சிறிலங்கா சிங்கள படைகளின் ஆட்கடத்தல்களில் ஈடுபட்ட தமிழின நபர்களான கருணா, டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் போன்றவர்கள் மீது சர்வதேச தடைகள்!

பிரித்தானிய பாராளுமன்ற அமைச்சர் மான்புமிகு பீற்றர் கெய்ல்;( Peter Kayle) மற்றும்; மான்புமிகு சிபோன் மக்டோ (Dame Siobhain McDonagh) ஆகியோரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள் “செம்மனி மனித புதைகுழி” மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிக் கோரிக்கை முன்வைப்பு. செம்மனி படுகொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் பின்னனியில் சிறிலங்கா சிங்கள படைகளின் ஆட்கடத்தல்களில் ஈடுபட்ட தமிழின நபர்களான கருணா, டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் போன்றவர்கள் மீது சர்வதேச தடைகள் கொண்டுவருமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தல்.

ஜப்பசி 13ம் திகதி Tamils for Labour அமைப்பின் தலைவர் திரு சென் கந்தையா(Mr. Sen Kandiah) அவர்களின் ஒருங்கமைப்பில் பல்நாட்டு மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். லேபர் கட்சியின் மூத்த உறுப்பினரும் தமிழ் மக்களுக்காக பிரித்தானிய பாராளுமன்றில் குரல் கொடுத்த மான்புமிகு சிபோன் Dame Siobhain McDonagh) மற்றும் பிரித்தானிய அரசின் முக்கிய அமைச்சர் மான்புமிகு பீற்றர் கெய்ல் (Peter Kayle, Secretary of State for Business and Trade) ஆகிய இருவருடனும் நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள், செம்மனி மனித புதைகுழி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இங்கிலாந்தின் வட மேற்கு பிரதேசத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி கபில்டன் தர்சிகா அவர்கள் இரு அமைச்சர்களுக்கும் தனது வாழ்க்கை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களால் எவ்வாறு பாதிக்கப்பட்டது என விளக்கமாக எடுத்துரைத்தார்.மேலும் செம்மனியில் குழந்தை தாயுடன் புதைக்கப்பட்ட கொடுமைகள் பற்றியும் விளக்கினார். பின்னர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மான்புமிகு அமைச்சர்களிடம் செம்மனி மனித புதைகுழி அறிக்கையை சமர்பித்தனர். மான்புமிகு அமைச்சர்கள் அங்கு கூடியிருந்த 200க்கு மேற்பட்ட பல் நாட்டு மக்களின் முன்பு உரை நிகழ்த்தும் போது இன்று நாம் காசா Gaza) நகரில் நடந்த கொடுமை சம்பவங்கள் போன்றே சிறிலங்காவிலும் வெளி உலகிற்கு மூடி மறைக்கப்பட்டு 80000ற்கும் மேற்பட்ட தமிழ் பொது மக்கள் 15 வருடங்களுக்கு முன்னர் கொன்று குவிக்கப்பட்டதாகவும் ஆனால் அவர்களுக்கு இன்றும் நீதி கிடைக்கவில்லை என்பதையும் மான்புமிகு சிபோன் கூறினார். தான் தற்போதைய அமைச்சர்களுடன் பேசி இன்னும் ஒரு வருடத்திற்குள் காணாமல் ஆக்கப்பட்டோர்கள் மற்றும் செம்மனி மனித புதைகளுக்கு பின்னனியில் இருந்த ராணுவ அதிகாரிகளுக்கு மட்டுமின்றி அவர்களுக்கு உதவிய தமிழ் குழுக்களின் தலைமைகள் டக்லஸ் தேவானந்தா போன்றவர்கள் மீதும் சர்வதேச தடைகளை விதிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க உழைப்பேன் என்று வாக்குறுதி அளித்தமை மிக வரவேற்கத்தக்க விடயமாகும்.

Bootstrap