செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம்(16.7.2026) 34 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இன்றுடன் 420 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அவற்றுள் 416 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இவற்றுள் 03 என்புத்தொகுதியானது சிறுவர்களினுடைய என்புத் தொகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன் 01 குழந்தையினுடைய என்புத் தொகுதியும் அடையாளம் காணப்பட்டுள்ளது. 130 பிறசான்றுப் பொருட்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர்.