ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகையான ஆடிப்பிறப்பு இன்று

ஆடிப்பிறப்பு என்பது தமிழ் ஆடி மாதத்தின் முதல் நாளைக் குறிக்கும் ஒரு விசேட பண்டிகையாகும் (பொதுவாக ஜூலை 16 அல்லது 17 ஆம் திகதிகளில் இது கொண்டாடப்படும்). இப்பண்டிகை குறிப்பாக ஈழத்துத் தமிழர்களின் (இலங்கைத் தமிழர்கள்) வாழ்வியலோடும் பண்பாட்டோடும் மிகவும் நெருங்கிய தொடர்புடைய ஒரு முக்கிய திருநாளாகும்.

சித்திரை முதல் ஆனி வரை நீடிக்கும் கோடை காலத்தின் வெப்பம் தணிந்து, குளுமையான காற்றுடன் கூடிய தென்மேற்குப் பருவமழை பெய்யத் தொடங்கும் காலமே ஆடி மாதமாகும்.

ஆடி மாதத்தில் பெய்யும் மழையை நம்பியே உழவர்கள் விதைக்கத் தொடங்குவார்கள். இதனால் தான் 'ஆடிப் பட்டம் தேடி விதை' என்ற பழமொழி உருவானது.

ஆன்மீக ரீதியாக, ஆடி மாதம் முழுவதும் அன்னை பராசக்திக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது.

ஆடிப்பிறப்பு என்றாலே நினைவுக்கு வருவது சுவையான பாரம்பரிய கூழ் மற்றும் கொமுக்ககட்டைகள் தான்.

வீடுகளைச் சுத்தம் செய்து, வாசலில் அழகிய கோலமிட்டு, இறைவனுக்குக் கூழும் கொழுக்கட்டையும் படைத்து,உறவினர்களோடு பகிர்ந்து உண்டு மகிழ்வதே இந்த ஆடிப்பிறப்பின் தனிச்சிறப்பாகும்.

Bootstrap