இலங்கையில் வீடுகளுக்களிற்குள்ளேயே நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

இலங்கையில் நுளம்பு குடம்பிகள் தற்போது அதிகளவில் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கும் இடங்களிலேயே கண்டறியப்படுவதாக சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வெளிப்புற சுற்றாடலுடன் ஒப்பிடும்போது வீடுகளுக்குள் வைக்கப்பட்டுள்ள பூச்சாடிகளிலும் குளிரூட்டிகளில் நீர் தேங்கும் இடங்களிலும் அதிகளவிலான நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் பதிவாகியுள்ளதாக சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன தெரிவித்தார்.

அதற்கமைய வீட்டு உரிமையாளர்கள் தமது வீடுகளை தொடர்ச்சியாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.நுளம்பு குடம்பிகள் பெருகக்கூடிய சூழலை வைத்திருக்கும் வீடுகள் மற்றும் வளாகங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கைகளும் விடுக்கப்படுகின்றன

கண்டி, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன கூறினார்.

கொழும்பு, இரத்தினபுரி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் நுளம்பு குடம்பிகளின் பெருக்கத்தில் வீழ்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

Bootstrap