சுரேஷ் சலே வழக்கு : இடைக்கால மனுக்களை பரிசீலிக்க நீதிமன்றம் திகதி நிர்ணயம்

இலங்கை: குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தன்னைக் கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்குமாறு கோரி அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனுவில், தங்களையும் இணைத்துக்கொள்ளுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுக்களை பரிசீலிப்பதற்காக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 மற்றும் 6 ஆம் திகதிகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இதன்போது கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் வணக்கத்துக்குரிய பெங்கமுவே நாலக தேரர் உள்ளிட்ட எட்டுத் தரப்பினர், இந்த மனுவில் தலையிட்டு கருத்துக்களை முன்வைக்க அனுமதி கோரி இடைக்கால (இடையீட்டு) மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கமைய, இடைக்கால மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளின் இணக்கப்பாட்டுடன், குறித்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக ஓகஸ்ட் 4 மற்றும் 6 ஆகிய திகதிகளை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

Bootstrap