பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ள Fontainebleau காட்டில் பற்றிய தீ, காட்டின் 10 சதவிகித பரப்பை அழித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், காட்டில் தீவைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரான்ஸ் ஜனாதிபதியான மேக்ரான் எச்சரித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு தெற்கே அமைந்துள்ள Fontainebleau காட்டில் பற்றிய தீ 35,000 ஹெக்டேர் சதவிகித காட்டை அழித்து விட்ட நிலையில், வேண்டுமென்றோ அல்லது தெரியாமலோ தீயை வைத்த பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அவர்களில் ஒருவர் தன்னார்வலராக செயல்பட்ட தீயணைப்புவீரர் என்னும் செய்தி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இவர் எரிபொருள் மற்றும் லைட்டரைப் பயன்படுத்தி வேண்டுமென்றே தீ வைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
பிரான்ஸ் ஊடகங்களின் (France 24) தகவல்படி, சுமார் 950-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் கனடாவிலிருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு தீயணைப்பு விமானங்கள் மூலம் தீ தற்போது ஓரளவுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இருப்பினும், வறண்ட காலநிலை நீடிப்பதால் தீ முழுமையாக அணைய இன்னும் பல நாட்கள் அல்லது வாரங்கள் ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.யுனெஸ்கோ (UNESCO) உயிரியல் பூங்காவாக அறிவிக்கப்பட்ட இக்காட்டுப் பகுதியைப் பாதுகாக்கவும், மறுசீரமைக்கவும் சிறப்பு நிதியுதவித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது