ஜப்பானில் குழந்தைகள் பெறுவதில் ஆர்வம் காட்டாத மக்கள்

ஜப்பானில் பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் இளம் தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. 2026-ஆம் ஆண்டின் புதிய புள்ளிவிவரங்களின்படி, ஜப்பானில் 30 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாதவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களுக்குக் குழந்தைகள் வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் அந்நாட்டில் பிறப்பு விகிதம் மிக வேகமாகச் சரிந்து, மக்கள் தொகை வீழ்ச்சி ஒரு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.

குறைந்த ஊதியம், அதிகமான வாடகை, குழந்தைகளுக்கான பராமரிப்பு செலவு போன்ற காரணங்களால் ஜப்பான் நாட்டு இளைஞர்களிடம் திருமணம் செய்யும் ஆர்வம் குறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

எனவே, ஜப்பானியர்கள் மன ஆறுதலை போக்குவதற்காகவும், துணைக்காகவும் பலரும் நாய் மற்றும் பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார்கள்.

இதனால் ஜப்பானில் 1 - 15 வயது வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை விட செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

குழந்தைங்களின் எண்ணிக்கை 13.29 மில்லியனாக இருக்கும் நிலையில் செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை 15.67 மில்லியனை தாண்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Bootstrap