இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோஷிதவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

நிதிச் சலவை தடுப்பு சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது முறைப்பாட்டுத் தரப்பு சாட்சியாளர்களிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

பிரதிவாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மென்டிஸ் முன்னிலையாகி சாட்சியாளர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். இதனையடுத்து மேலதிக சாட்சி விசாரணைகளுக்கென வழக்கு இம்மாதம் 24ம் தகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதியில் 730 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐந்து காணித் துண்டுகளை கொள்வனவு செய்ததன் ஊடாக நிதிச் சலவை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் குற்றமிழைத்துள்ளதாக தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Bootstrap